Showing posts with label Newsletters. Show all posts
Showing posts with label Newsletters. Show all posts

Jun 9, 2016

News Letter June-2014 of Divisional Union

Kindly find the News Letter for June-2014 of Divisional Union in the following Link. Its for private circulation.

Click To Download

Divisional Secretary

Mar 12, 2016

Meeting with Chairman, GDS Committee by SG-FNPO


On 11-03-2016, the President FNPO& SGFNPO met the Chairman & Secretary GDS Committee at their office. Informally we discussed GDS issues in General. 

The chairman & secretary of the committee are positive and they are keen to the settle the issues of GDS within their boundary the committee may hold meeting with Federations/ Unions in the 3rd week of April2016 onwards. 

The Chairman categorically assured that the committee would submit its report within prescribed period. Let us hope they will recommend favorable suggestions to the Government for the betterment of GDS. On 10-03-2016 , the President FNPO& SGFNPO met M ember planning & Member HRD outcome of the meeting will be published in the Sentinel.

D. Theagarajan
SGFNPO-New Delhi

Nov 27, 2015

News from our Secretary General

Secretary General FNPO met Postal Board member, DR (SR) and DR (Mails)
 Outcome of the meeting :
 1) No circles sent membership position to the Directorate as on date. Directorate send reminder on 24.11.2015 to all Circles to send the membership position within a week.
2) Drivers Recruitment Rules finalized. Gazette notification issued.(This will be published in our website soon).
3)  Appeal to all Branch/Division/Circle Secretaries to hold protest meeting On (27.11.15) in all work places against 7th CPC recommendations and appointment of former    member (P) as GDS committee Chairman to review GDS salary.

Oct 9, 2015

RMS CB Division-FNPO Newsletter-October-2015


தோழர்களே! தோழியர்களே!!
 
FNPO, உலகளாவிய அளவில் யூனியன் நெட்வொர்க் இண்டர்நேஷனல் (UNI) என்ற அமைப்போடு இயைந்து செயல்படுவது அறிந்ததே. இந்த அமைப்பின் ஆசியா-பசிபிக் மண்டலத்தில், இந்திய ஒருங்கிணைப்பு அமைப்பு UNI India Liaison Council (UNI-ILC) மும்பையை தலைமை இடமாகக் கொண்டு செயல்படுகிறது. சர்வதேச அளவில் தொழிலாளர்களுக்கு உதவி செய்யும் வகையில், ஜெர்மனியை பூர்வீகமாகக் கொண்ட ஃப்ரெடரிச் ஈபர்ட் ஸ்டிப்துங் (Friedrich Ebert Stiftung-FES) என்ற அமைப்பின் பொருளுதவியோடு தென்னிந்திய அளவில், இரண்டு நாள் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கான முன்னேற்ற பயிலகம்  ஒன்றை கோவை ஹோட்டல் கிராண்ட் பிளாசாவில் கடந்த செப்டம்பர் 5 மற்றும் 6 தேதிகளில் நடத்தியது.
இதை திருமதி. அஞ்சலி படேகர் அவர்கள் சிறப்பாக வழிநடத்தினார்.  UNI பற்றியும்,  FES பற்றியும் அவற்றின் செயல்பாடுகள் பற்றியும் எடுத்துரைத்தார். நமது சங்க செயல்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்றும், அதன் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துரைத்தார். டாக்டர். ப்ரவீன் சின்ஹா Senior Project Advisor(Labour), FES அவர்கள்  தற்கால சங்கப்பணிகளில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பங்கு பற்றி சிறப்புரை ஆற்றினார். வழக்கறிஞர் திரு. எம். சஞ்சையன் அவர்கள் பெண்கள் பாதுக்காப்புச் சட்டம் பற்றியும் அதன் அமைப்பு, செயல்பாடுகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.
 நமது மாப்பொதுச்செயலாளர் திரு. தே தியாகராஜன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். நமது மண்டலச் செயலர் திரு. . இராஜாமணி அவர்கள் பயிலரங்க ஏற்பாடுகளை செய்திருந்தார். மேற்கு மண்டல  சார்பில் அஞ்சல் ஆர்.எம்.எஸ் தோழர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் நமது கோட்டத்தைச் சார்ந்த. திரு இருதயராஜா GDS CBE RMS, திரு. ஆனந்தகுமார் SA CBE RMS (B/S), திரு. வே. மு. சிவக்குமார் SA TUP RMS, திருமதி மு. திலகவதி SA OTY STG ஆகியோர் கலந்து கொண்டனர்இது மிகுந்த பயனுள்ளதாகவும், பணி/சங்கம் தொடர்பான பிரச்சினைகளை எவ்வாறு கையாள்வது என்றும், சங்க வளர்ச்சியினால் ஏற்படும் பயன்கள் பற்றியும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
இந்த பயிலரங்கில், தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களைச் சார்ந்த பரோடா வங்கி, யூனியன் வங்கி, அஞ்சல் ஆர்.எம்.எஸ் துறைகளின் நமது தோழமை தேசிய சங்க உறுப்பினர்கள் 25 பேர் கலந்து கொண்டனர்கலந்து கொண்டவர்களுக்கு தினப்படியும், வெளியூர்களில் இருந்து வந்த உறுப்பினர்களுக்கு தங்குமிடம், பயணச்செலவுகள் அனைவருக்குமான இரண்டு நாள் உணவுச் செலவு, ஹால் வாடகை உள்ளிட்ட அனைத்து  செலவுகளையும் FES அமைப்பு ஏற்றுக்கொண்டது.
இந்த பயிலரங்கினை கோவையில் நடத்திட ஏற்பாடு செய்த நமது மாப்பொதுச்செயலாளர் திரு. தே தியாகராஜன் அவர்களுக்கும், UNI ILC Co-Ordinator திருமதி. அஞ்சலி படேகர் அவர்களுக்கும், FES SPA(L) டாக்டர் ப்ரவின் சின்ஹா அவர்களுக்கும், இக்கோட்ட சங்கம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. UNI Asia Pacific (singapore) இயக்குநர் திரு. கிறிஸ்டோபர் உங் - அவர்களுக்கும், FES-Germany அமைப்புக்கும் கோட்ட சங்கம் மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
மாதாந்திர பேட்டி:
நமது சங்கத்தின் சார்பில் 06.10.2015 அன்று கோட்ட நிர்வாகத்துடன் மாதாந்திர பேட்டி நடைபெற்றது. இதில் கோட்ட செயலர் வெ. ஆறுச்சாமி மற்றும் திரு வே.மு. சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். கோட்ட கண்காணிப்பாளர் அவர்கள், HRO-Accounts பகுதிக்கு புதிய லேசர் பிரிண்டர், கோவை NSH க்கு புதிய ஃபேன், PH, CBE க்கு தேவைப்படும் உபகரணங்களை வழங்கவும், திருப்பூர் ஆர்.எம்.எஸ்-க்கு மவுஸ் பேடுகள் வழங்கவும் அனுமதியளித்தார். கோட்ட கண்காணிப்பாளர் அவர்களுக்கு கோட்ட சங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேம்.
முப்பெரும் விழா
மேலும், வரும் 18.10.2015 ஞாயிறு அன்று நமது கோட்டச் சங்கத்தின் சார்பாக  புதிதாக நமது சங்கத்தில் இணைந்துள்ள ஊழியர்களுக்கு பாராட்டு விழாவும், கோட்ட நிர்வாகம் சார்பில் சிறத்த   supervisor மற்றும் Sorting Assistant ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தோழர் தோழியர்களுக்கு பாராட்டு விழா மற்றும் நமது கோட்ட சங்கத்தின் சார்பில் இணையதளம், Facebook பக்கங்களின் தொடக்க விழா ஆகிய முப்பெரும் விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அது சமயம் தோழர்கள் தோழியர்கள் அனைவரும் தவறாமல்  கலந்து கொள்ள அன்போடு வேண்டுகிறேன்.
தேதி: 18.10.2015   இடம்: HRO அலுவலக வளாகம்   நேரம்:காலை 10 மணி.
கோவை                                                           இப்படிக்கு

08.10.2015                                                       வெ. ஆறுச்சாமி,
                                                               கோட்ட செயலர்.
குறிப்பு:
UNI-ILC இன் பொதுச்செயலாளரகவும் நமது மாபொதுச்செயலர் திரு. தே தியாகராஜன் உள்ளார். மாபொதுசெயலரின்  முயற்சினால்தான் கோவையில் பயிலரங்கம் நடத்தவும், நம்முடைய உறுப்பினர்கள்  (Postal and RMS) கலந்துகொள்ளவும் நமது UNI சிங்கப்பூர் அலுவலகத்தில் அனுமதி கிடைத்தது.  மாபொதுச்செயலருக்கு அனைவரும் சார்பில் மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

FES- Friedrich Ebert Stiftung என்பது ஜெர்மன் நாட்டின் முதல் அதிபர் ஆவார். அவர் ஒரு தொழிலாளியாக இருந்து அதிபர் பதவியை அடைந்தவர். எனவே அவருடைய மறைவின் போது, தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் விற்று அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு ஒரு அறக்கட்டளை (Foundation)  தொடங்க வழிவகை செய்தார். இந்த அறக்கட்டளை உலகம் முழுவதும் இருக்கும் தொழிலாளர்களின் நலனுக்காக செயல்படுகிறது. இதன் பொருளுதவியோடுதான் (சுமார் இரண்டு இலட்சம் ரூபாய்) மேற்கூறிய பயிலரங்கம் நடத்தப்பட்டது. மேலும் தொழிலாளர்கள் படிக்க விரும்பினால், Global Labour University வாயிலாக அனைத்து உதவிகளும் (செலவு உள்பட) இந்த அமைப்பு செய்கிறது.

UNI-Union Network International அமைப்பானது சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள ஃஜுரிச் நகரில் தலைமயகத்தைக் கொண்டுள்ளது. இதனுடைய பிரதேச அலுவலகம் சிங்கப்பூரில் உள்ளது. சிங்கப்பூர்(ஆசியா-பசிபிக்) பிரதேச அலுவலகத்தலைவராக திரு. கிறிஸ்டோபர் உங் அவர்கள் உள்ளார். இவரே, மேற்கூறிய பயிலரங்கத்துக்கு அனுமதி அளித்தார். மேலும் விவரங்களுக்கு www.uniglobalunion.org என்ற இணையதளத்தைக் காணவும்

இத்தகைய அமைப்புகளில் நமது FNPO இணைந்து செயல்படுவது பெருமைக்குரிய ஒன்றாகும்


Aug 4, 2015

News letter dated 3-8-2015



INTUC             FNPO NURE

அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே!!                                                      
உண்மையை நிலைநாட்டவும், உரிமையை வென்றெடுக்கவும், எப்போதும் உறுப்பினர் நலன் கருதி செயல்படும் கோவை கோட்ட தேசிய RMS & MMS ஊழியர் சங்க தோழர், தோழியர்களுக்கு நன்மைகள் பற்பல பெருகிடவும், செல்வமும், மகிழ்ச்சியும் ஆடி மாத புதுவெள்ளமாக உங்கள் இல்லங்களில் நிலைத்திருக்க ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தேசிய செய்திகள்
கடந்த வாரம் திருவனந்தபுரத்தில்நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில், பெருவாரியான உறுப்பினர்கள் நமது கோட்டத்தில் இருந்து கலந்து கொண்டனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 1000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இம்மாநாட்டில் பங்கேற்றனர்.

1. திரு. D. தியாகராஜன் அவர்கள் மீண்டும் மாபொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தேசிய கவுன்சில் உறுப்பினர்களாக தமிழகத்தில் இருந்து, திரு. பொன். குமார், திரு. டி. நந்தகுமார் மற்றும் திரு. என். ரங்கராஜன் ஆகியோர் தேர்தெடுக்கப்பட்டனர்.
2. ஏழாவது ஊதியக்குழு, இதுவரை நடத்திவந்த சந்திப்பு மற்றும் ஆலோசனைக் கூட்டங்களை நிறைவு செய்துவிட்டது. தற்போது முழுமையான இறுதி அறிக்கை தயாரிக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. செப்டம்பர்-2015 இரண்டாம் வாரத்தில் ஊதியக்குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும். ஏறக்குறைய 40% ஊதிய உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
3. புதிய ஊதிய விகிதம் 1.1.2016 முதல் தான் வழங்கப்படும். 1.1.2014 இல் இருந்து வழங்க வேண்டும் என்ற ஊழியர் தரப்பு கோரிக்கை ஏற்கப்படவில்லை.
4. தற்போது 12 ஆம் வகுப்பு வரை வழங்க்ப்படும் CEA (ROTF), மேற்படிப்புக்கும் வழங்கப்படும் எனத் தெரிகிறது.
5. CGEIS பிரீமிய தொகையும், முதிர்வுத்தொகையும் அதிகரிக்கப்படும். இந்த இன்சூரன்ஸ் அமைப்பில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
6. போனஸ் ceiling இல் உயர்வு இருக்கும்.
7. பணியில் இருக்கும் போது ஊழியர் இறந்தால் தற்போது வழங்கப்படும் ex-gratia தொகை ரூ.10 இலட்சத்தில் இருந்து ரூ.50 இலட்சமாக அதிகரிக்கப்படும் என  எதிர்பார்க்கப்படுகிறது.
8. கோவை நகரைப் பொறுத்த வரையில், புதிய TPA ஆணை விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

கோட்டச் செய்திகள்:
1. கடந்த 23.7.2015 அன்று நடைபெற்ற மாதந்திர பேட்டியில், கோவை ஆர்.எம்.எஸ் செட் 1, extension beyond working hours இனிமேல் இருக்காது எனவும், அமேசான் தபால்கள் 1230 மணிக்குள் வருமாறு பார்த்துக் கொள்ளப்படும் எனவும் கண்காணிப்பாளர் உறுதி அளித்தார்.
2. கோவை ஆர்.எம்.எஸ்-இல் (speednet) புதிதாக மின் விசிறிகள் அமைக்கப்படும் எனவும்
3. திருப்பூர் ஆர்.எம்.எஸ்-இல் அனைத்து கணினிகளுக்கும் Mouse Pad வழங்கவும்,
4. திருப்பூர் ஆர்.எம்.எஸ் network cabling பணிகளை துரிப்படுத்தவும் கண்காணிப்பாளர் அவர்கள் உறுதி அளித்தார்.
5. நமக்கு தேவையான வசதிகளை வழங்கிய கோட்ட கண்காணிப்பாளர் அவர்களுக்கு இக்கோட்டச் சங்கம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
அஞ்சலி
விஞ்ஞானிகள், அறிஞர்கள், கவிஞர்கள் தத்துவ மேதைகள், ஈடு இனையில்லா தலைவர்கள் என பலரையும் உலகிற்கு அளித்த தமிழன்னையின் மற்றொரு கொடையான, இந்தியாவின் ஏவுகணை நாயகன், அணுசக்தி நாயகன், தலைசிறந்த விஞ்ஞானி, திருக்குறள் வழிநடந்த பாரத ரத்னா டாக்டர். ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் அவர்களுக்கு இக்கோட்ட சங்கம் கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறது.
அன்புடன்
க. இராஜாமணி வீ. ஆறுச்சாமி
மாநில தலைவர்/மண்டல செயலாளர் கோட்டச் செயலாளர்