|
FNPO, உலகளாவிய அளவில்
யூனியன் நெட்வொர்க்
இண்டர்நேஷனல் (UNI) என்ற அமைப்போடு இயைந்து
செயல்படுவது அறிந்ததே.
இந்த அமைப்பின்
ஆசியா-பசிபிக்
மண்டலத்தில், இந்திய
ஒருங்கிணைப்பு அமைப்பு
UNI India Liaison Council (UNI-ILC) மும்பையை
தலைமை இடமாகக்
கொண்டு செயல்படுகிறது.
சர்வதேச அளவில்
தொழிலாளர்களுக்கு உதவி செய்யும் வகையில்,
ஜெர்மனியை பூர்வீகமாகக்
கொண்ட ஃப்ரெடரிச்
ஈபர்ட் ஸ்டிப்துங்
(Friedrich Ebert Stiftung-FES) என்ற அமைப்பின் பொருளுதவியோடு
தென்னிந்திய அளவில்,
இரண்டு நாள் இளைஞர்கள் மற்றும்
பெண்களுக்கான முன்னேற்ற
பயிலகம் ஒன்றை கோவை ஹோட்டல் கிராண்ட்
பிளாசாவில்
கடந்த செப்டம்பர் 5 மற்றும் 6 தேதிகளில்
நடத்தியது.
இதை திருமதி.
அஞ்சலி படேகர்
அவர்கள் சிறப்பாக
வழிநடத்தினார். UNI பற்றியும், FES பற்றியும் அவற்றின்
செயல்பாடுகள் பற்றியும்
எடுத்துரைத்தார். நமது சங்க செயல்பாடுகள் எவ்வாறு
இருக்க வேண்டும்
என்றும், அதன் முக்கியத்துவம் பற்றியும்
எடுத்துரைத்தார். டாக்டர்.
ப்ரவீன் சின்ஹா
Senior Project Advisor(Labour), FES அவர்கள் தற்கால
சங்கப்பணிகளில் பெண்கள்
மற்றும் இளைஞர்களின்
பங்கு பற்றி
சிறப்புரை ஆற்றினார்.
வழக்கறிஞர் திரு.
எம். சஞ்சையன்
அவர்கள் பெண்கள்
பாதுக்காப்புச் சட்டம்
பற்றியும் அதன் அமைப்பு, செயல்பாடுகள்
பற்றியும் விரிவாக
எடுத்துரைத்தார்.
நமது மாப்பொதுச்செயலாளர் திரு. தே தியாகராஜன்
கலந்து கொண்டு
சிறப்புரை ஆற்றினார்.
நமது மண்டலச்
செயலர் திரு.
க. இராஜாமணி
அவர்கள் பயிலரங்க
ஏற்பாடுகளை செய்திருந்தார்.
மேற்கு மண்டல சார்பில்
அஞ்சல் ஆர்.எம்.எஸ் தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதில் நமது கோட்டத்தைச் சார்ந்த.
திரு இருதயராஜா GDS CBE
RMS, திரு. ஆனந்தகுமார் SA CBE RMS (B/S), திரு. வே. மு. சிவக்குமார் SA TUP RMS, திருமதி மு. திலகவதி SA OTY STG ஆகியோர் கலந்து கொண்டனர். இது மிகுந்த பயனுள்ளதாகவும்,
பணி/சங்கம் தொடர்பான
பிரச்சினைகளை எவ்வாறு
கையாள்வது என்றும்,
சங்க வளர்ச்சியினால்
ஏற்படும் பயன்கள்
பற்றியும் விரிவாக
எடுத்துரைக்கப்பட்டது.
இந்த பயிலரங்கில்,
தமிழகம் மற்றும்
கேரள மாநிலங்களைச்
சார்ந்த பரோடா
வங்கி, யூனியன்
வங்கி, அஞ்சல்
ஆர்.எம்.எஸ் துறைகளின்
நமது தோழமை தேசிய சங்க உறுப்பினர்கள்
25 பேர் கலந்து
கொண்டனர். கலந்து கொண்டவர்களுக்கு தினப்படியும், வெளியூர்களில் இருந்து
வந்த உறுப்பினர்களுக்கு தங்குமிடம், பயணச்செலவுகள் அனைவருக்குமான
இரண்டு நாள் உணவுச் செலவு,
ஹால் வாடகை
உள்ளிட்ட அனைத்து செலவுகளையும்
FES அமைப்பு ஏற்றுக்கொண்டது.
இந்த பயிலரங்கினை
கோவையில் நடத்திட
ஏற்பாடு செய்த
நமது மாப்பொதுச்செயலாளர் திரு. தே தியாகராஜன்
அவர்களுக்கும், UNI ILC Co-Ordinator திருமதி. அஞ்சலி
படேகர் அவர்களுக்கும்,
FES SPA(L) டாக்டர் ப்ரவின் சின்ஹா
அவர்களுக்கும், இக்கோட்ட
சங்கம் நன்றியை
தெரிவித்துக் கொள்கிறது.
UNI Asia Pacific (singapore) இயக்குநர்
திரு. கிறிஸ்டோபர்
உங் - அவர்களுக்கும், FES-Germany அமைப்புக்கும் கோட்ட
சங்கம் மிகுந்த
நன்றியை தெரிவித்துக்
கொள்கிறது.
மாதாந்திர பேட்டி:
நமது சங்கத்தின் சார்பில் 06.10.2015 அன்று கோட்ட
நிர்வாகத்துடன் மாதாந்திர பேட்டி நடைபெற்றது. இதில் கோட்ட செயலர் வெ. ஆறுச்சாமி மற்றும்
திரு வே.மு. சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். கோட்ட கண்காணிப்பாளர் அவர்கள்,
HRO-Accounts பகுதிக்கு புதிய லேசர் பிரிண்டர், கோவை NSH க்கு புதிய ஃபேன், PH,
CBE க்கு தேவைப்படும் உபகரணங்களை வழங்கவும், திருப்பூர் ஆர்.எம்.எஸ்-க்கு மவுஸ் பேடுகள்
வழங்கவும் அனுமதியளித்தார். கோட்ட கண்காணிப்பாளர் அவர்களுக்கு கோட்ட சங்கத்தின் சார்பில்
நன்றியை தெரிவித்துக் கொள்கிறேம்.
முப்பெரும் விழா
மேலும், வரும் 18.10.2015 ஞாயிறு அன்று நமது கோட்டச்
சங்கத்தின் சார்பாக புதிதாக நமது சங்கத்தில்
இணைந்துள்ள ஊழியர்களுக்கு பாராட்டு விழாவும், கோட்ட நிர்வாகம் சார்பில் சிறத்த supervisor மற்றும் Sorting Assistant ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள
தோழர் தோழியர்களுக்கு பாராட்டு விழா மற்றும் நமது கோட்ட சங்கத்தின் சார்பில் இணையதளம்,
Facebook பக்கங்களின் தொடக்க விழா ஆகிய முப்பெரும் விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அது சமயம் தோழர்கள் தோழியர்கள் அனைவரும் தவறாமல்
கலந்து கொள்ள அன்போடு வேண்டுகிறேன்.
தேதி: 18.10.2015 இடம்:
HRO அலுவலக வளாகம் நேரம்:காலை 10 மணி.
கோவை இப்படிக்கு
08.10.2015 வெ. ஆறுச்சாமி,
கோட்ட செயலர்.
குறிப்பு:
UNI-ILC இன் பொதுச்செயலாளரகவும் நமது மாபொதுச்செயலர்
திரு. தே தியாகராஜன் உள்ளார். மாபொதுசெயலரின்
முயற்சினால்தான் கோவையில் பயிலரங்கம் நடத்தவும், நம்முடைய உறுப்பினர்கள் (Postal and RMS) கலந்துகொள்ளவும்
நமது UNI சிங்கப்பூர் அலுவலகத்தில் அனுமதி கிடைத்தது. மாபொதுச்செயலருக்கு அனைவரும் சார்பில் மிகுந்த நன்றியை
தெரிவித்துக் கொள்கிறோம்.
FES-
Friedrich Ebert Stiftung என்பது ஜெர்மன் நாட்டின் முதல் அதிபர் ஆவார். அவர் ஒரு தொழிலாளியாக
இருந்து அதிபர் பதவியை அடைந்தவர். எனவே அவருடைய மறைவின் போது, தன்னுடைய சொத்துக்கள்
அனைத்தையும் விற்று அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு ஒரு அறக்கட்டளை (Foundation)
தொடங்க வழிவகை செய்தார். இந்த அறக்கட்டளை உலகம் முழுவதும்
இருக்கும் தொழிலாளர்களின் நலனுக்காக செயல்படுகிறது. இதன் பொருளுதவியோடுதான் (சுமார்
இரண்டு இலட்சம் ரூபாய்) மேற்கூறிய பயிலரங்கம் நடத்தப்பட்டது. மேலும் தொழிலாளர்கள் படிக்க
விரும்பினால், Global Labour University வாயிலாக அனைத்து உதவிகளும்
(செலவு உள்பட) இந்த அமைப்பு செய்கிறது.
UNI-Union Network International அமைப்பானது
சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள ஃஜுரிச் நகரில் தலைமயகத்தைக் கொண்டுள்ளது. இதனுடைய பிரதேச
அலுவலகம் சிங்கப்பூரில் உள்ளது. சிங்கப்பூர்(ஆசியா-பசிபிக்) பிரதேச அலுவலகத்தலைவராக
திரு. கிறிஸ்டோபர் உங் அவர்கள் உள்ளார். இவரே, மேற்கூறிய பயிலரங்கத்துக்கு அனுமதி அளித்தார்.
மேலும் விவரங்களுக்கு www.uniglobalunion.org என்ற இணையதளத்தைக்
காணவும்
இத்தகைய அமைப்புகளில் நமது FNPO இணைந்து
செயல்படுவது பெருமைக்குரிய ஒன்றாகும்