Aug 4, 2015

News letter dated 3-8-2015



INTUC             FNPO NURE

அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே!!                                                      
உண்மையை நிலைநாட்டவும், உரிமையை வென்றெடுக்கவும், எப்போதும் உறுப்பினர் நலன் கருதி செயல்படும் கோவை கோட்ட தேசிய RMS & MMS ஊழியர் சங்க தோழர், தோழியர்களுக்கு நன்மைகள் பற்பல பெருகிடவும், செல்வமும், மகிழ்ச்சியும் ஆடி மாத புதுவெள்ளமாக உங்கள் இல்லங்களில் நிலைத்திருக்க ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தேசிய செய்திகள்
கடந்த வாரம் திருவனந்தபுரத்தில்நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில், பெருவாரியான உறுப்பினர்கள் நமது கோட்டத்தில் இருந்து கலந்து கொண்டனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 1000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இம்மாநாட்டில் பங்கேற்றனர்.

1. திரு. D. தியாகராஜன் அவர்கள் மீண்டும் மாபொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தேசிய கவுன்சில் உறுப்பினர்களாக தமிழகத்தில் இருந்து, திரு. பொன். குமார், திரு. டி. நந்தகுமார் மற்றும் திரு. என். ரங்கராஜன் ஆகியோர் தேர்தெடுக்கப்பட்டனர்.
2. ஏழாவது ஊதியக்குழு, இதுவரை நடத்திவந்த சந்திப்பு மற்றும் ஆலோசனைக் கூட்டங்களை நிறைவு செய்துவிட்டது. தற்போது முழுமையான இறுதி அறிக்கை தயாரிக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. செப்டம்பர்-2015 இரண்டாம் வாரத்தில் ஊதியக்குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும். ஏறக்குறைய 40% ஊதிய உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
3. புதிய ஊதிய விகிதம் 1.1.2016 முதல் தான் வழங்கப்படும். 1.1.2014 இல் இருந்து வழங்க வேண்டும் என்ற ஊழியர் தரப்பு கோரிக்கை ஏற்கப்படவில்லை.
4. தற்போது 12 ஆம் வகுப்பு வரை வழங்க்ப்படும் CEA (ROTF), மேற்படிப்புக்கும் வழங்கப்படும் எனத் தெரிகிறது.
5. CGEIS பிரீமிய தொகையும், முதிர்வுத்தொகையும் அதிகரிக்கப்படும். இந்த இன்சூரன்ஸ் அமைப்பில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
6. போனஸ் ceiling இல் உயர்வு இருக்கும்.
7. பணியில் இருக்கும் போது ஊழியர் இறந்தால் தற்போது வழங்கப்படும் ex-gratia தொகை ரூ.10 இலட்சத்தில் இருந்து ரூ.50 இலட்சமாக அதிகரிக்கப்படும் என  எதிர்பார்க்கப்படுகிறது.
8. கோவை நகரைப் பொறுத்த வரையில், புதிய TPA ஆணை விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

கோட்டச் செய்திகள்:
1. கடந்த 23.7.2015 அன்று நடைபெற்ற மாதந்திர பேட்டியில், கோவை ஆர்.எம்.எஸ் செட் 1, extension beyond working hours இனிமேல் இருக்காது எனவும், அமேசான் தபால்கள் 1230 மணிக்குள் வருமாறு பார்த்துக் கொள்ளப்படும் எனவும் கண்காணிப்பாளர் உறுதி அளித்தார்.
2. கோவை ஆர்.எம்.எஸ்-இல் (speednet) புதிதாக மின் விசிறிகள் அமைக்கப்படும் எனவும்
3. திருப்பூர் ஆர்.எம்.எஸ்-இல் அனைத்து கணினிகளுக்கும் Mouse Pad வழங்கவும்,
4. திருப்பூர் ஆர்.எம்.எஸ் network cabling பணிகளை துரிப்படுத்தவும் கண்காணிப்பாளர் அவர்கள் உறுதி அளித்தார்.
5. நமக்கு தேவையான வசதிகளை வழங்கிய கோட்ட கண்காணிப்பாளர் அவர்களுக்கு இக்கோட்டச் சங்கம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
அஞ்சலி
விஞ்ஞானிகள், அறிஞர்கள், கவிஞர்கள் தத்துவ மேதைகள், ஈடு இனையில்லா தலைவர்கள் என பலரையும் உலகிற்கு அளித்த தமிழன்னையின் மற்றொரு கொடையான, இந்தியாவின் ஏவுகணை நாயகன், அணுசக்தி நாயகன், தலைசிறந்த விஞ்ஞானி, திருக்குறள் வழிநடந்த பாரத ரத்னா டாக்டர். ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் அவர்களுக்கு இக்கோட்ட சங்கம் கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறது.
அன்புடன்
க. இராஜாமணி வீ. ஆறுச்சாமி
மாநில தலைவர்/மண்டல செயலாளர் கோட்டச் செயலாளர்