Apr 18, 2017

மே-14 முதல் தமிழ்நாடு மற்றும் புதுவையில் பெட்ரோல் பங்குகளுக்கு ஞாயிறு 'விடுமுறை'!

இது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பெட்ரோல் விற்பனை நிலையங்களின் உரிமையாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை விபரம் வருமாறு:

அடுத்த மாதம் 14-ஆம் தேதி முதல் தமிழ்நாடு மற்றும்  புதுச்சேரியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாளாக இருக்கும் .

மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்றே இந்த முடிவை எங்கள் அமைப்பு எடுத்திருக்கிறது.

இதற்கு முன்னர் தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாளாக இருக்கிறது. 

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.