Apr 27, 2016

ரயில்கள் விவரம் அறிய 'மிஸ்டு கால்' வசதி:

கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு, 'மிஸ்டு கால்' கொடுத்து, உள்ளூர் ரயில்களின் வருகை மற்றும் புறப்பாடை அறிந்து கொள்ள, மேற்கு ரயில்வேயின், 'மிஸ்டு கால்' வசதி, மும்பையில் துவங்கப்பட்டுள்ளது.மஹாராஷ்டிர மாநிலத்தில், உள்ளூர் ரயில்களின் இயங்கு நிலையான, 'ரன்னிங் ஸ்டேடஸ்' தகவலை, பயணிகள் எளிதாக அறிந்து கொள்வதற்கு கட்டணமில்லா தொலைபேசி வசதியை, தனியார் நிறுவனத்துடன் இணைந்து, மேற்கு ரயில்வே அறிமுகப்படுத்தி உள்ளது.

மேற்கு ரயில்வேயின் மக்கள் தொடர்பு அதிகாரி கூறியதாவது: உள்ளூர் ரயில்களில் பயணம் செய்ய விரும்பும் பயணிகள், அதன் வருகை மற்றும் புறப்பாடு குறித்து தெரிந்து கொள்ள, 1800 212 4502 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில், 'மிஸ்டு கால்' கொடுக்க வேண்டும். அந்த தொடர்பு தானாகவே துண்டிக்கப்பட்ட பின், வாடிக்கையாளரின் மொபைல் எண்ணுக்கு, இரண்டு குறுஞ்செய்திகள் வரும். அதில், உள்ளூர் ரயில்களின் இயக்கம் குறித்த தகவல்கள் இடம்பெற்றிருக்கும்