Oct 5, 2016

Trekking in Wildlife- A seminar organized by Youth Wing - Invitation



அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே!
வணக்கம். நமது பணியினால் உண்டாகும் மன அழுத்தத்தை குறைக்கும் வகையிலும், உறுப்பினர்களின் நலனை கருத்தில் கொண்டும், நமது FNPO R3 இளைஞர் அணி சார்பாக, காடுகளில் Trekking நிகழ்ச்சி எதிர்வரும் டிசம்பர் மாதம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அது சமயம், காடுகளில் நிலவும் தற்போதைய சூழல், விலங்குகளின் வாழ்க்கைப் போராட்டம்,  காட்டு எல்லைப் பகுதிகளில் நடக்கும் மனித-விலங்குகளின்  மோதல் குறித்தும், Trekking செல்லும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் குறித்தும் தெரிந்து கொள்ள, கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த கருத்தரங்கில், திரு. கே. வி. ஆர். கே. திருநாரணன், நிறுவனர், த நேச்சர் டிரஸ்ட், சென்னை அவர்கள் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகிறார். காடுகள், விலங்குகள் தொடர்பாக, 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆராய்ச்சி செய்து வரும், இவர், மேற்கு மலைத்தொடர்ச்சி மலைகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் trekking செய்துள்ளவர்.  கருத்தரங்கத்தினைத் தொடர்ந்து, கேள்வி பதில் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
கருத்தரங்கம் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி
இடம்: மனமகிழ் மன்றம், HRO அலுவலகம், கோவை
நேரம்: 08.10.2016 (சனிக்கிழமை) காலை 0930 மணி



. ஆனந்த குமார்                                     வே. மு. சிவக்குமார்
கோட்ட செயலர் (Youth Wing)                          கோட்ட செயலர்
கோவை 

05.10.2016