Jul 11, 2016

ஒரே பதிலுக்கு ஒரு மாணவருக்கு சரி, ஒரு மாணவிக்கு தவறு பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணியில் குளறுபடி.

தமிழகத்தில் பிளஸ் 2 பொது தேர்வை 8.33 லட்சம் மாணவர்கள் எழுதினார்கள். இவர்கள் எழுதிய விடைத்தாள்களை திருத்தும் பணியில் பல குளறுபடிகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இதன் படி, தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர் பிளஸ் 2ல்1,181 மதிப்பெண் எடுத்திருந்தார்.

ஆங்கிலத்தில் 195மதிப்பெண் எடுத்திருந்தார்.ஆங்கிலத்தில் கூடுதல் மதிப்பெண் வரும் என்று எண்ணிய மாணவி விடை தாளின் நகல் கேட்டு விண்ணப்பித்தார். அப்போது, அப்துல்கலாம் தொடர்பான கேள்விக்கு சரியான பதில் எழுதியிருந்தும் தவறு என்று குறிப்பிட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவி மறு மதிப்பீட்டிற்காக விண்ணப்பித்தார்.

மறுமதிப்பீடிவின் முடிவிலும் அப்துல்கலாம் தொடர்பான கேள்விக்கு தவறு என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.ஆனால், அதே கேள்விக்கு வேறு மாணவர்களுக்கு சரி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த மாணவிக்கு ஒரு மதிப்ெபண் கிடைத்திருந்தால் 1182 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் 3வது இடம் ெபற்று இருப்பார். ஆனால், ஆசிரியர்களின் அலட்சியத்தால் 3ம் இடம் பெறும் வாய்ப்பு தவறியது.

இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்டத்தில் தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆங்கில முதுகலை ஆசிரியர் பாலு கூறியதாவது:  விடைத்தாள்கள் திருத்தும் பணியில் குறைந்தது 3 ஆண்டுகளாவது அனுபவம் உள்ள ஆசிரியர்களையே நியமிக்க வேண்டும்.  ஆனால், எந்தவித  அனுபவமும் இல்லாத ஆசிரியர்களை நியமிக்கின்றனர். இதனால், விடைத்தாள்கள் திருத்தும் பணியில் பல குளறுபடிகள் நடக்கின்றன. இவ்வாறு, தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவரின் விடைத்தாளில் அப்துல் கலாம் தொடர்பான ஒரு கேள்விக்கு சரியான பதிலை எழுதியிருந்தார்.  ஆனால், அதை தவறு என்று ஆசிரியர்கள் திருத்தியுள்ளனர். ஆனால், அதே பதில் எழுதியுள்ள வேறு மாணவர்களுக்கு சரி என்று குறிப்பிட்டுள்ளனர். உண்மையில் அந்த கேள்விக்கு மாணவி குறிப்பிட்ட பதில் சரி தான். 

இதனால், ஒரு மதிப்பெண் இழந்து மாவட்ட அளவில் 3வது இடம் பெறுவதற்கான வாய்ப்பை அந்த மாணவி இழந்துள்ளார்.மாவட்ட நிர்வாகம் சார்பில் கிடைக்க வேண்டிய ஊக்க தொகை உள்ளிட்ட பல சலுகைகள், மாவட்ட அளவில் 3வது இடம் என்ற அங்கீகாரம் உள்ளிட்டவற்றை இழந்துள்ளார்.  இவ்வாறு, ஆசிரியர்களின் அலட்சியத்தால் பாதிக்கப்படுவது என்னவோ மாணவர்களின் எதிர்காலம்தான்.எனவே, இனிவரும் காலங்களிலாவது அனுபவமுள்ள ஆசிரியர்களை நியமித்து விடைத்தாள்கள் திருத்தும் பணியை செம்மைப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.