Jun 22, 2016

பகுதி நேர ஆசிரியர்கள் பதிவு தபால் அனுப்பும் போராட்டம்.

தமிழ்நாடு கலை ஆசிரியர் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: ஓவியம், தையல், இசை, உடற்கல்வி, கணினி, தோட்டக்கலை, கட்டிடக் கலை என பல்வேறு பிரிவுகளில் தமிழகத்தில் 16 ஆயிரத்து 549 பேர் பகுதி நேர ஆசிரியர்களாக கடந்த 2012ம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் கடந்த 2014ல் ந டந்த பாராளுமன்ற தேர்தலின்போது, பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் மாதம் ரூ. 2ஆயிரம் ஊக்க ஊதியம் தமிழக அரசு வழங்கியது.தற்போது மாதம் ரூ.7 ஆயிரம் பெற்று வரும் நிலையில் இது ஒரு திட்ட அறிக்கை எனவும் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பில்லை என்றும் பள்ளிக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து, மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈரக்கும் வகையில் ஒவ்வொரு பகுதிநேர ஆசிரியரும்தலா 10 தபால்கள் என மொத்தம் 1 லட்சத்து 65 ஆயிரம் பதிவுத் தபால்கள் மத்திய மாநில அரசுகளுக்கு அனுப்பும் புதிய போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.முதற்கட்டமாக கலை ஆசிரியர் ந லச் சங்கத்தின் சார்பில் அதன் செயலாளர்  சார்பில் முதல் கருணை மனு முதல்வர் தனிப்பிரிவுக்கு நேரில் வழங்கியுள்ளோம். 

பகுதி நேர சிறப்பாசிரியர்கள் மத்திய அரசு நிதியில் 65 சதவீதமும்,மாநில அரசு நிதியில் 35 சதவீதமும் ஊதியமாக பெற்று வருகின்றனர். அதனால் மத்திய மாநில அரசுகளுக்கு மேற்கண்ட பதிவுத்  தபால்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த கோரிக்கை மனு மீது இரு அரசுகளும் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் ஜூலை 9ம் தேதி மாபெரும் கவன ஈர்ப்பு பேரணி சென்னையில் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு ராஜ்குமார் அறிக்கையில் கூறியுள்ளார்.