Jun 21, 2016

எனது இந்தியா-நூல் விமர்சனம் - கே. காதர் இப்ராஹிம்

எனது இந்தியா-நூல் விமர்சனம்
கேகாதர் இப்ராஹிம்

போதைப் பொருளான அபினியை சீனாவில் வர்த்தகம் செய்ததால், சீனாவிற்கும், பிரிட்டனுக்கும் இடையே நடந்த அபினிப்போர் பற்றி உங்களுக்கு தெரியுமா?

ÀÆí¸¡Ä þó¾¢Â ¾ñ¼¨É Ó¨ÈÂ¡É “¸Ø§ÅüÈõ” ±ôÀÊ ¿¢¨È§ÅüÈôÀð¼Ð ±Éò ¦¾Ã¢ÔÁ¡?

ÅÃÄ¡üÈ¢ø ¦¸¡ñ¼¡¼ôÀÎõ ºÄ£õ-«É¡÷¸Ä¢, «õÀ¢¸¡À¾¢-«Áអ ¸¡¾ø ¯ñ¨ÁÂøÄ, ҨɧбýÚ «È¢Å£÷¸Ç¡?

À£¸¡÷ ¾¨Ä¿¸Ã¡É À¡ðÉ¡ ÁðÎÁøÄ ¸¼æ÷ «Õ§¸ ¯ûÇ ¾¢ÕôÀ¡¾¢Ã¢ôÒÄ¢äâý À¨ÆÂ ÅÃÄ¡üÚô ¦ÀÂÕõ À¡¼Ä¢Òò¾¢Ã§Á, Ó츢 ¨¸¾¢¸¨Ç ºí¸¢Ä¢Â¢ø À¢¨½òÐ ¨Åò¾¾¡ø «ó¾Á¡ý º¢¨È¨ÄìÌ Åó¾ ¦ºøÖÄ÷ ¦ƒÂ¢ø ¦ÀÂ÷, þó¾¢Â¡-À¡¸¢Š¾¡ý À¢Ã¢Å¢¨É¢ý §À¡Ð ¯Ä¸ ÅÃÄ¡üÈ¢§Ä§Â «¾¢¸ ÀðºÁ¡¸ 12.5 Á¢øÄ¢Âý Áì¸û þ¼ô¦ÀÂ÷ ¦ºö¾Ð, Å¢¨ÄìÌ Å¡í¸ôÀ𼠫ʨÁ¸¨Ç ÌòÒ¾£ý ³ÀìÌõ, Á¡Ä¢ì¸¡âÕõ «¾¢¸¡Ãò¨¾ ¨¸ôÀüȢ ¦ºö¾¢, À¾¢É¡Ú «øÄ À¾¢§ÉØ Ó¨ÈÔõ À¨¼¦ÂÎòÐò §¾¡ü¸¡Áø þó¾¢Â §¸¡Â¢ø¸¨Çì ¦¸¡û¨ÇÂÊò¾ ¸ƒ¢É¢, தீவிரவாதி என்று முத்திரை குத்தப்பட்ட பகத்சிங் சிறையில் அகிம்சை வழியில் உண்ணாவிரதம் இருந்து கைதிகளுக்கு ஆதரவாக வெற்றி கண்டது உள்ளிட்ட சுவராஸ்யமான இந்திய வரலாற்றுத் தகவல்களோடு ஜூனியர் விகடனில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பே எஸ்.இராமகிருஷ்ணன்எனது இந்தியாபுத்தகம்.

நாம் அனைவரும் பள்ளியில் வரலாற்றுப்பாடம் படித்திருப்போம். பெரும்பாலான வரலாற்று வகுப்புகள் மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர் துவங்கி நாம் உறங்கத் துவங்கியதும் முடிவுறும். வரலாறு என்பது நடந்து முடிந்த சம்பவங்களின் எச்சம் என்பதே நமக்கு கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது. வரலாற்றை சுவராஸ்யமாக கற்றுக் கொடுக்க நம் கல்வி முறையில் எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை?

மொழிகள் அழிவதற்கு முக்கிய காரணம் அவற்றின் வரலாற்றையும், தொன்மையையும் நாம் சரியாக அறியாததே. மதிப்பெண்களுக்காகவும், தகவல்களுக்காகவும் அன்றி இந்திய வரலாற்றில் வாசித்து அறிய வேண்டியவை ஏராளம் இருக்கின்றன என்பதை எஸ். இராமகிருஷ்ணன்எனது இந்தியாபடிக்கையில் புரிந்து கொள்ளலாம்.

நமக்குத் தெரிந்த மற்றும் தெரியாத வரலாற்றை இந்திய வரலாற்றை செய்திகளாகவும், போராட்டங்களாகவும், தகவல்களாகவும் அவற்றின் பின்புலத்தோடு தனக்கே உரிய தனி நடையில் பதிவு செய்திருக்கிறார் எஸ். ரா.

மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கோட்சேவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படும் நீதி விசாரணை குறித்த கட்டுரையுடன் துவங்கி இந்திய மொழிகள் அழியும் நிலையில் உள்ள அபாயம் சொல்லும் கட்டுரையுடன் நிறைவுறும்எனது இந்தியாபுத்தகம் முற்காலம், கற்காலம் பற்றியெல்லாம் கவலைப்படாமல், இந்தியாவின் கடந்த காலத்தை ஒரே நாளில் ஒரே புத்தகத்தில் அறிய விரும்புவர்களை அவசரமாய் அழைத்துச் செல்லும் ஓர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்!

இந்தியாவை குறுக்கும் நெடுக்கமாய் சுற்றித் திரிந்த ஆசிரியரின் தேசாந்திரி அனுபவம் வரலாற்றுச் சம்பவங்களை சித்திரம் போல் நமக்குப் படம் பிடித்துக் காட்ட அவருக்கு உதவி செய்திருக்கிறது.

அரசாங்கங்கள் இன்றைக்குத்தான் பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் மேலதிகாரிகளை அணுகி குறை களைந்து கொள்ளலாம் என்ற முறையினை பின்பற்றுகின்றன என்றால் இல்லை அதை மாமன்னர் அசோகர் தன் காலத்திலேயே ஆரம்பித்து வைத்து விட்டார் என்கிறார் ஆசிரியர்.

தன் தந்தை ஷாஜஹானின் இறுதி ஊர்வலத்தை வேண்டுமென்றே எளிமையாக நடத்தினார் ஔரங்கசீப் என்பன போன்ற செய்திகளோடு ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்களின் மனநிலை, வலிமிகுந்த தனிப்பட்ட வாழ்க்கை முறை பற்றியும் எழுதத் தவறவில்லை. இன்றைய புது டெல்லியை அன்றைக்கு வடிவமைத்த லுட்யன்ஸ், அப்போதைய வைஸ்ராய் லிட்டன் பிரவுவின் மருமகன் (இந்தியாவின் First Influenced Contractor) இந்திய நில அளவைத் திட்டமான ந்தியன் லேண்ட் சர்வேயை முன்னின்று நடத்திய வில்லியம் லாம்டன், சென்னையில் உள்ள பரங்கி மலையில் அதை தொடங்கி, வடக்கே இமயமலையில் முடித்தார். அதன் விளைவாக உலகின் மிக உயரமான சிகரம் எனக் கண்டறியப்பட்டதே எவரஸ்ட் சிகரம்.

மரங்களைக் கட்டிக் கொண்டு வெட்ட விடாமல் பாதுகாத்த சுந்தர்லால் பகுகுணாவின்சிப்கோஇயக்கம் (சிப்கோ என்றால் கட்டிக் கொள்ளுதல்), பாதயாத்திரை சென்று இந்தியா முழுவதும் நிலத்தை தானமாகப் பெற்று நிலமற்றவர்களுக்கு வழங்கி விவசாயத்திற்கு எழுச்சி தந்த வினோபா பாவேவின் பூமிதான இயக்கம் ஆற்காட்டு வீரர் என புகழப்படும் இராபர்ட் கிளைவ் லஞ்ச லாவண்யத்தில் திளைத்தவர். அவர் தற்கொலை செய்து கொண்டு இறந்ததால் அவர் உடலை தேவாலயம் வாங்க மறுத்தது. தன்னை எதிர்த்த நேர்மையான நிர்வாக அதிகாரியான நந்தகுமார் என்பவர் மீது பொய் வழக்குப் புனைந்து அவருக்கு தூக்கு தண்டனையை பெற்றுத்தந்த வாரன் ஹேஸ்டிங்ஸ், விக்டோரியா மகாராணிக்கு சேவகம் செய்யப்போன இந்திய எடுபிடியான அப்துல் கரீம், அவரின் விசுவாசியான கதை என ஆட்சியின் உயர்நிலையில் இருப்பவர்கள் பற்றி மட்டுமல்லாமல் சாமான்யரின் வரலாறும் சொல்லப்பட்டிருக்கிறது.
பெரும்பான்மை பிரிட்டிஷ் இந்திய ஆட்சிக்காலத்தில் நடந்தவற்றை மட்டும் மேற்கோள் காட்டியிருப்பதிலும், உலக வரலாற்றோடு தொடர்பில்லாமல் இந்திய வரலாற்றை விவரித்திருப்பதிலும், நவீன இந்திய வரலாற்று ஆய்வாளரான ராமச்சந்திர குஹாவின் புத்தகங்களைப்போல் செறிவு மிகுந்த தேடலை முன் வைக்காமல் போனது உள்ளிட்ட குறைகளை நீக்கிவிட்டுப் படித்தால்எனது இந்தியாவின் பயணம் செய்து ஹரப்பா, மொஹன்சதோரா குளக்கரையில் ததும்பும் தண்ணீரில் எஸ். இராமகிருஷ்ணனோடு சேர்ந்து நாமும் கால் நனைக்கலாம்.
ஆசிரியர் பற்றி:
எஸ். இராமகிருஷ்ணன், நவீன தமிழ் இலக்கியத்தில் மிக முக்கியமான எழுத்தாளர், சென்னையில் வசிக்கிறார்.
பெற்ற விருதுகள்:
கனடாவின் இயல் விருது, தாகூர் பரிசு, ஞான வாணி விருது
பிற நூல்கள்
வெளியில் ஒருவன், காட்டின் உருவம், உறுபசி, யாமம், தேசாந்திரி, சிறிது வெளிச்சம் மற்றும் பல.
புத்தகம் வெளியீடுஎனது இந்தியா- விகடன் பிரசுரம் விலை ரூ. 355/=
தலைப்பு: “எனது இந்தியா”- அறிந்த இந்தியாவின் அறியாத பக்கங்கள்.

*********************************************************************************
நூல் விமர்சகர் திரு. கே காதர் இப்ராஹிம், ஈரோடு அஞ்சல் துறையில், அஞ்சல் பிரிப்பாளராக பணிபுரிகிறார். சிறந்த சிந்தனையாளர், அதிக எண்ணிக்கையில் புத்தகம் படிப்பவர். சிறந்த எழுத்தாற்றல் உள்ளவர். இவருடைய இன்ன பிற ஆங்கில/தமிழ் நூல் அறிமுகங்கள்/விமர்சனங்கள் தொடர்ந்து இத்தளத்தில் வெளியிடப்படும்.
கோட்ட செயலர்.