சட்டசபைத் தேர்தலால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசுப் பள்ளிகள் அசுத்தமாகியுள்ளனவாம். விரைவில் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் இவற்றை சுத்தம் செய்யும் பணி பெரும் தலைவலியாக மாறியுள்ளதாம். கோடை விடுமுறை முடிந்து விரைவில் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.
இந்த நிலையில் பெரும்பாலான அரசுப் பள்ளிகள் அலங்கோலாமாக காணப்படுகின்றன. காரணம் சட்டசபைத் தேர்தல். சட்டசபைத் தேர்லின்போது அனைத்து அரசுப் பள்ளிகளும் பூத்துகளாக செயல்பட்டன. இதனால் அங்கு தேர்தல் தொடர்பான பல்வேறு பணிகள் நடைபெற்றன. அவை அனைத்தும் இப்போது அகற்றப்பட்டு பள்ளிகளை புதுப்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சுவர்களில் அசுத்தம்... சுவர்களில் மார்க்கிங் போட்டது, வாக்காளர்களுக்கான போஸ்டர்கள் உள்ளிட்டவை அப்படி அப்படியே உள்ளனவாம். பெரும்பாலான பள்ளிகளில் இன்னும் இவற்றை அகற்ற வேண்டிய வேலை பாக்கி உள்ளதாம்.