Mar 30, 2016

இன்று அவர்கள் நாளை. . .

இன்று அஞ்சல் அலுவலகங்களில் என்ன நடக்கிறது.

சிறு சேமிப்பு வட்டி குறைக்கப்பட்டுள்ளது. சாப்ட்வேர் வேலை செய்யவில்லை. இப்போது சாப்ட்வேர், Infosys கட்டுப்பாட்டில் உள்ளதால், இங்குள்ள எவராலும் ஒன்றும் செய்யவில்லை. இன்று வருடக் கடைசி, விரைவாக பணம் கட்டுங்கள் என்று எவர் சொன்னாலும், செய்ய இயலாத நிலை. பொதுமக்கள் எந்த பெரிய அதிகாரியிடம் சொன்னாலும் சரி செய்ய முடியாத நிலை. பணம் கட்டுவதற்கு வாடிக்கையாளர் தயார். வாங்குவதற்கு ஊழியர்களும் தயார். பிரச்சினை என்றால் அதை மேலிடத்துக்கு தெரிவிக்க சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர்களும் தயார். ஆனால் இன்போசிஸ் சாப்ட்வேர் (Finacle) வேலை செய்யவில்லை. கனெக்டிவிட்டி கிடைக்கவில்லை. இதை இரு யூனியனைச் சார்ந்த மாப்பொதுச்செயலர்களும், துறைத்தலைவரிடம் நேரடியாகச் சொல்லியும் உடனடி பயன் இல்லை.

ஊழியர்கள் காலையில் வந்தால், எப்போது இரவு வீட்டுக்குப்போவோம் என்று எவருக்கும் தெரியாது. இன்னும் சொல்லொணாத்துயரங்கள். யூனியன் தலைவர்கள் “இதற்கு நாங்களோ, அதிகாரிகளோ பொறுப்பில்லை” என்று போஸ்டர் அடித்து ஒட்டும் நிலை”
இதை இப்போது உங்களுக்குச் சொல்வது எதற்கென்றால்,
இன்று இவர்கள்.. நாளை. . . .


(உங்களுக்குத்தெரியுமா.. இந்த மூன்று மாதங்களில் மட்டும் கோவை அஞ்சல் கோட்டத்தில் 10 பேர் VRS இல் சென்றுள்ளார்கள் என்பது)