புதுடில்லி: மத்திய அரசின் நேரடி மானிய திட்டங்களை, புதிதாக துவக்கப்படவுள்ள, தபால் வங்கிச் சேவை மூலம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சமையல் காஸ், கிராமப்புற வேலை வாய்ப்பு உள்ளிட்ட, மத்திய அரசின், 40க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கான மானியங்கள், பயனாளிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம், மானியங்கள் நேரடியாக, பயனாளிகளுக்கு கிடைப்பதுடன், அதில் நடந்த முறைகேடுகளும் தடுக்கப்பட்டுள்ளன.
2015 டிசம்பர், 27 வரை, 40 ஆயிரம் கோடி ரூபாய், நேரடி மானியமாக, பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில், தபால் துறையை மேம்படுத்தும் வகையில், ஓர் அதிரடியான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இதன்படி, மத்திய அரசின் நேரடி மானிய திட்டங்களை, தபால் வங்கிச் சேவை மூலம் கையாள முடிவுசெய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம், நேரடி மானிய திட்ட பயனாளிகளுக்கு, அவர்கள் வசிக்கும் ஊர்களில் உள்ள தபால் வங்கி கிளையில் கணக்கு துவக்கப்படும். அரசின் மானியம், நேரடியாக பயனாளிகளின் தபால் வங்கி கணக்குகளில் சேர்க்கப்படும். அடுத்த ஆண்டு நிறைவடையும்நேரடி மானிய திட்டத்தை, தபால் வங்கி துறை கையாளுவது குறித்து, பி.ஐ.பி., எனப்படும், பொது முதலீட்டு வாரியம், வரும், 15ல், ஆலோசிக்கவுள்ளது. இதன்பின், மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு இது குறித்து பரிந்துரை செய்யப்படும். அமைச்சரவை அனுமதி அளித்ததும், அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்திய தபால் துறை, 'பேமன்ட் பேங்க்' எனப்படும், வங்கிச் சேவையில்
ஈடுபட, ரிசர்வ் வங்கி ஏற்கனவே அனுமதி அளித்துள்ளது. ஒரு சில
நிதிச் சேவைகளிலும், தபால் அலுவலகங்கள் ஈடுபட்டு வருகின்றன. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும்,
தபால் துறை சார்பில், ஏ.டி.எம்., மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
தபால் வங்கிச் சேவையை துவக்க, 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. தற்போது, இந்த தொகை, 800 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், தபால் வங்கிச்சேவையை அமைப்பதற்கான பணிகள், அடுத்தாண்டு ஜனவரியில் தான்,நிறைவடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது: முந்தைய ஆட்சியில் நலிவடைந்த நிலையில் இருந்த தபால் துறை, தற்போது மேம்படுத்தப் பட்டு உள்ளது. பல்வேறு புதிய சேவைகள் தபால் துறையில் துவக்கப்பட்டுள்ளன. வருமானம் ஈட்டும் துறைஇணைய வர்த்தக நிறுவனங்களான, 'பிளிப்கார்ட், ஸ்நாப்டீல், அமேசான், எப்மீ, ஷாப்குளூஸ்' போன்றவற்றுடன், தபால் துறை ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த நிறுவனங்களின் பொருட்களை, வாடிக்கையாளர்களுக்கு, 'டெலிவரி' செய்ததன் மூலம், இந்த நிதியாண்டில், தபால் துறைக்கு, 1,500 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. தபால் துறையை,வருமானம் ஈட்டும் துறையாக மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Source: http://www.dinamalar.com/