🌷அரசு ஊழியர்களை நிற்க வைத்து ஒருமுறை காலில் விழுந்து வணங்க வேண்டும்🙏🏻🌺🌷👏🏻💐
====================================================
🌺💐"ஒருத்தரும் வாங்குற சம்பளத்துக்கு வேலை செய்யறதில்லை. யாருக்கும் பொறுப்பில்லை.
🌷😪எப்பவும் எதிலும் அலட்சியம். இவங்களிடம் இருப்பதை எல்லாம் பிடுங்கி, தனியார்கிட்ட கொடுத்துடணும் சார். அப்போதான் இந்த நாடு உருப்படும்"💐
இந்த டயலாகை நாம் அடிக்கடி கேட்டிருப்போம்.
(சில சமயம் விரக்தியில் நானும் சொன்னதுண்டு.)
☔😯இப்போது பெருமழை ஊழித் தாண்டவமாடுகிறது.
🏡சொந்த வீடு பெருமை பேசியவர்கள் எல்லாம் வீதியில் நிற்கின்றனர்.☔
🏢பள்ளிக்கூடங்கள் எல்லாம் அகதிகள் முகாமாக மாற்றப்பட்டுள்ளது.💐
😪அடுத்து என்ன? என்று மக்களுடன் அரசாங்கமும் திகைத்து நிற்கிறது.💐
🌷கருத்து சொன்ன கந்தசாமிகள் எல்லாம் பாதுகாப்பாக அவரவர் வீட்டில் மிளகாய் பஜ்ஜி 🍛சாப்பிட்டுக் கொண்டு டிவி பார்த்துக் கொண்டிருக்க,
🌷அவர்கள் பெரும் நம்பிக்கையைப் பெற்ற டாடா, அம்பானி, அதானி எல்லாம் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்க,😪🌷
☔இடுப்பில் கயிறு கட்டிக் கொண்டு, பொங்கி வரும் ஏரியில் குதித்து மதகுகளை சரி செய்யும் பொதுப்பணித்துறை ஊழியர்களும்,☁
☁⚡☔கொட்டும் மழையிலும், வெற்றுடம்புடன் சாக்கடையில் குதித்து, வெறுங்கையாலேயே அடைத்துக்கொண்டிருக்கும் ப்ளாஸ்டிக் கழிவுகளை வாரி வெளியே போடும் மாநகராட்சி ஊழியர்களும்,☁☔
☔கீழே வெள்ளமும் மேலே மழையும் கொட்டிக் கொண்டு இருந்தும் எந்தப் பாதுகாப்புமின்றி துணிச்சலாக டிரான்ஸ்ஃபாரத்தில் ஏறி மின் தடங்களை சரி செய்து தரும் மின்வாரிய ஊழியர்களும்,☔⚡
அரசு தந்த ஓட்டைப் பேருந்துகளின் உள்ளே, தன் தலைக்கு மேலே கொட்டும் நீரிலிருந்து தப்பிக்க தலையில் ப்ளாஸ்டிக் கவரை சுற்றிக் கொண்டு வெள்ளம் பாயும் ஓட்டைச் சாலைகளில் பேருந்துகளை இயக்கும் மாநகர போக்குவரத்து ஊழியர்களும்,☔
எல்லாவற்றையும் அடித்துக் கொண்டுச் செல்லும் ஆற்று வெள்ளத்தில் துணிச்சலாக குதித்து, வீட்டில் வந்து சேரும் விஷப்பாம்புகளை வெறும்கையில் தூக்கி, ஆள் உயர தண்ணீரிலும் நீந்தி சென்று கடமையாற்றும் தீயணைப்புத்துறை வீரர்களும்தான்
இப்போது கதியற்று திகைத்து நிற்கும் சாமானிய மக்களுடன் துணை நிற்கின்றனர்.👏🏻💐
👌🏻இரவு, பகல் இல்லை. வீடு, மனைவி கவலை இல்லை. பசி, தூக்கம்,ஓய்வு இல்லை.👏🏻
🌺👌🏻குறைந்த பட்சம் அருகில் இருந்து தட்டிக் கொடுக்க எந்த அதிகார வர்க்கங்களும் இல்லை.
இருந்தும், துணிச்சலாக கடமையாற்றும் இந்த மனிதர்களை வணங்குகிறேன்.🙏🏻👏🏻👌🏻🙏🏻🙏🏻
☔🙏🏻மக்கள் பணியாற்றும் இவர்களை அரசு ஊழியர்கள் என்றும்
அதிகாரத்துக்கு அலைபவர்களை மக்கள் தொண்டர் என்றும்
பெயரிட்டு அழைக்கும் இந்த சமூகத்தின் நகைமுரண் கண்டு வியக்கிறேன்.😪👌🏻👏🏻🙏🏻🙏🏻
🙏🏻⚡இந்தக் கொடுங்கனவு முடிந்தவுடன்,
🌷🙏🏻சிறந்த முறையில் பணியாற்றிய இத்தகைய பணியாளர்கள் அனைவரையும் வரிசையாக நிற்க வைத்து 🙏🏻
😪🙏🏻👏🏻அவர்கள் காலில் விழுந்து வணங்க வேண்டும்
என்று தோன்றுகிறது.💐🌷🌺🙏🏻🙏🏻👏🏻