வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகக் கடற்கரையோரப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் கன மழை முதல் மிகக் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழைபெய்ய வாய்ப்பு உள்ளது.அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகக் கடலோரம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன மழை மற்றும் மிகக் கன மழை பெய்யும்.சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது