ஐதராபாத், செப்.13–
மத்திய தொழிலாளர் நல மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
மத்திய அரசு ஊழியர்களுக்கு இதுவரை ரூ.3,500 போனஸ் வழங்கப்பட்டு வந்தது. அதை ரூ.7 ஆயிரமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
போனஸ் பெறுவதற்கு அடிப்படை சம்பளம் தகுதி வரையரை ரூ.10 ஆயிரமாக இருந்தது. அது ரூ.21 ஆயிரமாக அதிகரிக்கப்படுகிறது.
இதுபற்றிய முடிவு ஒரு மாதத்துக்கு முன்பே எடுக்கப்பட்டு விட்டது. வருகிற பாராளுமன்ற கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டு செயலுக்கு கொண்டுவரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.